பாடசாலையில் சேவையாற்றிய அனுபவமுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஆசிரியர் யாப்பிற்கமைய பரீட்சைக்கு முகம்கொடுக்குமாறு தான் அவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க பாடசாலை அபிவிருத்தி உத்தியோகர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்குமிடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அனைவரினதும் தொழில் அபிலாஷைகள் மற்றும் கௌரவத்தை பாதுகாப்பது அரசின் நோக்கமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.


