2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கிண்ணத் (ICC T20 World Cup 2026) தொடருக்கான வர்ணனையாளர் குழுவில் இலங்கையைச் சேர்ந்த நான்கு முக்கிய பிரமுகர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரங்களான குமார் சங்கக்கார, அஞ்சலோ மெத்தியூஸ், ரசல் ஆர்னோல்ட் மற்றும் ரோஷன் அபேசிங்க ஆகியோர் இந்த உத்தியோகபூர்வ வர்ணனையாளர் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) அறிவிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அனுபவம் வாய்ந்த இலங்கை வர்ணனையாளர்கள் மற்றும் வீரர்கள் உள்வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


