2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் (ICC Under-19 Cricket World Cup 2026) வரலாற்றுச் சாதனை படைத்து சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, நாடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
அணித்தலைவர் ஆயுஷ் மத்ரே (Ayush Mhatre) தலைமையிலான இந்திய அணி, இந்தத் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
அணித்தலைவர் மத்ரே மற்றும் சக வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) உள்ளிட்ட ஏனைய வீரர்கள் இந்தியா திரும்பியபோது, இரசிகர்கள் மற்றும் அதிகாரிகளால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


