எரிபொருள் விலை திருத்தம்: பெற்றோல் 92; ஒட்டோ டீசல் குறைப்பு

fuel price increased oct 02 1 1
– ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு ரூ. 2 வீதம் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி,
ஒட்டோ டீசல்: ரூ. 279 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 277
பெற்றோல் 92: ரூ. 294 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 292
பெற்றோல் 95: ரூ. 340 மாற்றமில்லை
சுப்பர் டீசல்: ரூ. 323 மாற்றமில்லை
மண்ணெண்ணெய்: ரூ. 182 மாற்றமில்லை

புதிய விலைகள்:

ஒட்டோ டீசல்: ரூ. 277
சுப்பர் டீசல்: ரூ. 323
பெற்றோல் 92: ரூ. 292
பெற்றோல் 95: ரூ. 340
மண்ணெண்ணெய்: ரூ. 182