போதைப் பாவனையை ஒழிப்போம் பாலமுனையில் விழிப்புணர்வு

12.4 5

போதைப்பொருள் பாவனையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் ​பாலமுனை – 3ஆம் பிரிவின் சிவில் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி ​விடுதி அத்தியட்சகர் எஸ்.எல்.றகுமத்துல்லாஹ் தலைமையிலும் அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர் கெ.ரவிராஜின் ஒருங்கிணைப்பிலும் அண்மையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, போதைப்பொருள் பாவனையால் ஏற்படக்கூடிய சமூகப் பாதிப்புகள் மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைய சமுதாயத்தை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக விளக்கமளித்தார். மேலும் இளைஞர்களிடம் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதால் தமது பிள்ளைகள் மீது பெற்றோர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் தலைக்கவசம் அணிவதன் முக்கியம், போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதன் அவசியம், பாலமுனை ​பிரதேசத்தின் இரவுநேர பாதுகாப்புச் சம்பந்தமாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதில் பாலமுனை 3ஆம் பிரிவுக்கான பிரஜா சக்தி தவிசாளர், அரச ஊழியர்கள், சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களாகிய பலரும் கலந்துகொண்டனர்.