தற்பொழுது அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை இடம்பெறுவதைத் தொடர்ந்து அரசின் உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்யும் பணி நெல் சந்தைப்படுத்தும் சபையால் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அச்சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று, சாகாமம், தீகவாபி, நாவிதன்வெளி பிரதேசங்களில் முதல் கட்டமாக இந்த வாரமும் ஹூனாலுகே, பாணமை, பொத்துவில், மல்வத்தை பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக அடுத்த வாரமும் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு கிலோகிராம் நாடு வெள்ளை, சிவப்பு அரிசி நெல் 120 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் சம்பா நெல் 130 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 140 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் சுமார் 2,500 முதல் 5,000 கிலோகிராம்வரை கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரசின் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவுக்கு ஏற்பாடு


