கொழும்பு SSC மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்விளக்கு கட்டமைப்பு நேற்று (28) மாலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இதற்கமைய நாட்டிலுள்ள சர்வதேச கிரிக்கட் மைதானங்களில் மின்விளக்கு கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட 5ஆவது மைதானம் இதுவாகும்.
இதுவரையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம், பல்லேகலை, சூரியவௌ மற்றும் ரங்கிரி தம்புள்ளை ஆகிய மைதானங்களில் குறித்த மின் விளக்கு கட்டமைப்பு காணப்பட்டது.
மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒளியமைப்பு LED தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 6 தூண்களைக் கொண்டதாக உள்ளது.
இதேவேளை பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாகும் வகையில் பல வண்ணங்களைக் கொண்டதாக மின் விளக்குகள் ஒளிரும் வகையிலும் கட்டமைப்பு அமையப்பெற்றுள்ளதுடன் LED மின் விளக்குகளைக் கொண்டு உருவங்களை உருவாக்கும் நுட்பமும் அதில் அடங்கியுள்ளது.
இந்த ஆரம்ப விழாவின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக முதல் பந்தை வீச, அதனை இலங்கை கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான சனத் ஜயசூரிய எதிர்கொண்டார்.
இந்த உத்தியோகபூர்வ திறப்பு விழாவினைத் தொடர்ந்து, SSC அணிக்கும் இலங்கை கிரிக்கெட் (SLC) அபிவிருத்தி அணிக்கும் இடையில் ஒரு நட்புமுறைப் போட்டி நடைபெற்றது.


