இலங்கை மகளிர் பெப்.–மார்ச்சில் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம்

janu28

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்காக எதிர்வரும் பெப்ரவரி 20 தொடக்கம் மார்ச் 3 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

தொடரின் இந்த ஆறு போட்டிகளும் கிரெனடா தேசிய அரங்கில் நடைபெறவுள்ளன. பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறவிருப்பதோடு இதன் அடுத்த இரு போட்டிகளும் பெப்ரவரி 22 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறும். தொடர்ந்து டி20 தொடர் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகும். இதன் அடுத்த இரு போட்டிகளும் மார்ச் 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெறும்.

இதில் டி20 தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமாக உள்ளது. 2026 மகளிர் டி20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன், ஜூலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு தயாராவதற்கு இந்தத் தொடர் முக்கியமாக உள்ளது. உலகக் கிண்ணத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் குழு 2 இல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துடன் இடம்பிடித்துள்ளன. இந்த குழுவில் இடம்பெறும் மேலும் இரு அணிகளும் இன்னும் தகுதி பெறவில்லை.

இலங்கை மகளிர் அணி 2024 ஆசிய கிண்ணத்தை வென்ற பின் முதல் டி20 தொடர் ஒன்றை வெல்லும் எதிர்பார்ப்புடன் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி தனது சொந்த மண்ணில் கடைசியாக ஆடிய பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மகளிர்கள் கடைசியாக 2024 இல் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடுவதற்கு மேற்கிந்திய தீவுகள் சென்றிருந்தது. அதில் இலங்கை அணி ஒருநாள் தொடரை 3–0 என வென்றதோடு டி20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2–1 என கைப்பற்றியது.