இந்தியா வந்து ஆட ஸ்கொட்லாந்து தயார்

janu26

டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்று விளையாட தங்கள் அணி இந்தியாவுக்கு விரைவில் பயணிக்கும் என ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபை தலைமை நிறைவேற்று அதிகாரி ட்ரூடி லிண்ட்ளேட் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் பங்கேற்க தங்கள் அணியை அழைத்ததற்கு ஐ.சி.சியிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர பங்களாதேஷ் மறுத்ததை அடுத்தே ஸ்கொட்லாந்து அணிக்கு அந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து லிண்ட்ளேட் கூறியதாவது, ‘எங்கள் அணி டி20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்று விளையாடுவது தொடர்பாக அழைப்பை ஐ.சி.சி. எங்களுக்கு கொடுத்தது. அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு இந்த தொடரில் பங்கேற்கிறோம். எங்களுக்கு அழைப்பு விடுத்த ஐ.சி.சியிற்கு நன்றி. சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் விளையாடும் பொன்னான வாய்ப்பு இது. சவாலான சூழலில் இந்த வாய்ப்பு எங்கள் வசமாகி உள்ளது’ என்றார.