இலங்கையிலுள்ள சவுதி அரேபியா தூதரகம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்திய தேசிய மட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியில் வெலிகம அறபா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) தரம் 7இல் கல்வி கற்கும் ஹபீபா அஸ்லம், அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தை சுவீகரித்து பெருமை சேர்த்துள்ளார். இம் மாணவி வெலிகம ஹிழ்ரிய்யா அறபுக் கல்லூரி பெண்கள் பிரிவில் பகுதி நேர குர்ஆன் மனனப் பிரிவில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெலிகம ஹிழ்ரிய்யா மாணவி 03ஆம் இடம்


