பொங்கலின் அர்த்தத்தை சரியாக புரிவது வாழ்க்கைக்கு வளமூட்டும்

dailynews650 105

இந்து பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தைப்பொங்கல் விழாவின் பாடத்தை நன்றாக அறிந்துகொள்வது நமது வாழ்க்கையில் மிகப்பெரிய பயனாக இருக்குமென,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியல் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல மொழிகள் கொண்ட சமுதாயத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்படுவது, அந்தந்த இனங்களின் கலாசார அடையாளங்களை மதிக்க அனைவரும் காட்டும் அர்ப்பணிப்பின் அடிப்படையிலாகும். அதேபோல்,அந்தந்த கலாசாரங்களின் மையக் கருத்துகளை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதிலும் இனங்களின் இருப்புக்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன.இந்தத் தருணத்தில் நமது பொறுப்பு, அந்த தூரநோக்கையும் தத்துவத்தையும் சமுதாயத்திற்கு வழங்குவதற்கான வழிகளை முடிந்த அளவு விரிவுபடுத்தட்டும். பாடசாலைகள், அறநெறி பாடசாலைகள், விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் ஆகியவையின் அடிப்படையில் அந்தந்த மதத்தினருக்கு உரிய கலாசார மற்றும் மத நிகழ்வுகள் பற்றிய முறையான அறிவை வழங்க தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ஒருவரையொருவர் மதித்து, கருணையுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.