தேசிய மட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியில் அல்-மத்ரஸதுன் நஜாஹிய்யா மாணவி ZH. பாத்திமா ஷின்ஃபா இரண்டாமிடம்!

unnamed (2)

சம்மாந்துறையில் இயங்கும் அல்-மத்ரஸதுன் நஜாஹிய்யா அல்-குர்ஆன் மனன கலாசாலையைச் சேர்ந்த மாணவிகள், சவூதி அரேபியா இஸ்லாமிய விவகார அமைச்சின் அனுசரணையிலும், முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற மாகாண அல்குர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பாகத் திகழ்ந்து, தேசிய மட்ட இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, திங்கள் (11) அன்று நடைபெற்ற தேசிய மட்ட இறுதிப் போட்டியில், அல்-மத்ரஸதுன் நஜாஹிய்யா கலாசாலையின் மாணவி ZH. Fathima Shinfa அவர்கள் அபார திறமையை வெளிப்படுத்தி இரண்டாமிடத்தை கைப்பற்றி, ரூ. 2,50,000/- (இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

குறிப்பிடத்தக்க விடயமாக, அல்-மத்ரஸதுன் நஜாஹிய்யா ஒரு பகுதி நேர (Part-Time) அல்குர்ஆன் மனன கலாசாலை என்பதும், அங்கு பயிலும் மாணவிகள் தங்களது பாடசாலை கல்வியுடன் இணைத்து அல்குர்ஆன் மனனத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய சூழ்நிலையிலும், ZH. பாத்திமா ஷின்ஃபா அவர்கள் தன்னுடைய ஒழுக்கம், முயற்சி மற்றும் உறுதியான மனப்பாங்கின் மூலம் இந்த உயரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இத்துடன், தேசிய மட்டத்துக்கு தகுதி பெற்றிருந்த மற்ற மாணவிகளான IA. Fathima Arriya, F. Atheefa Zainab, N. Zainab, MK. Ansitha Dhaheen ஆகியோரும் இம்மத்ரஸாவின் பெருமையாக விளங்குகின்றனர்.
இந்த மகத்தான வெற்றி, சம்மாந்துறைக்கும், அல்-மத்ரஸதுன் நஜாஹிய்யா கலாசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், எதிர்கால மாணவிகளுக்கு ஒரு ஊக்கமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.