மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவு
அம்புலுவாவ மலைக் குன்று மற்றும் உயிரியல் பல்வகைமை மையம் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் உடன் நிறுத்துமாறு சுற்றாடல் அமைச்சு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு அறிவித்துள்ளது. நிபுணர்களிடமிருந்து முறையான அறிக்கைகள் கிடைத்த பிறகு, அனைத்து கட்டுமானப் பணிகளையும் ஆரம்பிப்பது பற்றியும் ஆபத்து நிலைமை குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்புலுவாவ சுற்றுச்சூழல் வலயம் மற்றும் உயிரியல் பல்வகைமை மையம் என்பவற்றின் முகாமை தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலையை ஆராய சுற்றுச்சூழல் அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் அமைச்சின் அறிவுறுத்தலின்படி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அம்புலுவாவ என்பது கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான சுற்றாடல் மையமாகும். அதைப் பார்வையிடத் தினம் பலர் வருகை தருகின்றனர். அங்கு கட்டப்பட்டுள்ள அம்புலுவாவ உயிரியல் பல்வகைமை மையம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த இடமாகும்.


