தெஹிவளை–கல்கிசை மாநகர சபை சைக்கிளோட்ட அணி கடும் போட்டி

jan9

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அச்சு ஊடகம் மற்றும் லேக் ஹவுஸ் டிஜிட்டல் ஊடக அனுசரணையில், விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் கமகேவின் ஆலோசனைக்கு அமைய, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சைக்கிளோட்ட நடுவர்கள் சங்கம் இணைந்து நடத்தும் ‘லங்கா ரைட்’ சைக்கிளோட்டப் போட்டி ஜனவரி 16 ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் ஆரம்பமாகவுள்ளது.

‘லங்கா ரைட்’ சைக்கிளோட்டப் போட்டியின் முதல் தினத்தில் கண்டி சென்று, இரண்டாவது தினத்தில் அநுராபுரத்தில் பூர்த்தி செய்யப்படுவதோடு இறுதி நாளான டிசம்பர் 18 ஆம் திகதி புத்தளம் வீதி ஊடாக டொரின்டன் பிளேஸ் சுதந்திர சதுக்கத்திற்கு அருகே நிறைவடையவுள்ளது.

அந்தப் போட்டியில் இணையும் வலுவான சைக்கிளோட்ட அணி ஒன்றாக தெஹிவளை – கில்கிசை மாநகர சபை சைக்கிளோட்ட அணி உள்ளது. 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அணி விமானப் படை சைக்கிளோட்டப் போட்டியில் இரு தடவை இரண்டாவது இடத்தையும், 2014 தயட்ட கிருள போட்டியில் இரண்டாவது இடத்தையும் பெற்ற நிலையில் 2010 மேல் மாகாண முதலமைச்சு போட்டியில் சம்பியனானது. 2011 காலி சைக்கிளோட்டப் போட்டி மற்றும் 2012 மஹபொல சைக்கிளோட்டப் போட்டியிலும் வெற்றியீட்டியது. 2016 விமானப்படை போட்டியையும் அது வென்றது.

தவிர, விமானப்படை போட்டியில் 6 மலையேற்ற சம்பியன் பட்டங்கள், எஸ்.எல்.டி. ஸ்பீட் அப் போட்டியில் இரு கட்டங்களை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த சைக்கிளோட்ட அணி 12 வீரர்களை கொண்டுள்ளது. வலுவான அணி ஒன்றாக இம்முறை லங்கா ரைடில் பங்கேற்கும் தெஹிவளை – கல்கிசை மாநகர சபை அணிக்கு புகழ்பெற்ற சைக்கிளோட்ட வீரரான அவிஷ்க மெடொன்சாயா தலைமை வகிக்கிறார். அவர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி மற்றும் சாக் போட்டிகளில் பங்கேற்றிருப்பதோடு விமானப்படை போட்டியில் இரு முறை வெற்றியீட்டியுள்ளார்.

உப தலைவராக சுரங்க ரணவீர செயற்படுவதோடு அவர் இலங்கையில் இருக்கும் சிறந்த மலையேற்ற வீரராவார். 2019 விமானப்படை போட்டியை வென்ற லஹிரு மதுஷங்க, பல முன்னணி போட்டிகளிலும் வெற்றியீட்டிய கிஹான் லக்மால், சுரேஷ் தரங்க, ஜயந்த விஜேசிங்க, பிரதீப் தரங்க, தினிது நிர்மால், கித்னால் ராஜபக்ஷ, அநுஷ்க பீரிஸ், மதுஷான் சில்வா, தமுதித்த சொய்சா, மதுஷங்க பெரேரா ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ள ஏனைய வீரர்களாவர்.

பயிற்சியாளராக காமினி ஜயவர்தன, ஆலோசகராக பிரசன்ன மெடொன்சா, முகாமையாளராக தினேஷ் சமுத்ரிக ஆகியோர் செயற்படுகின்றனர். அமெரிக்காவின் நியூயோர்க் கிரிக்கெட் கழகம் தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்கு அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.