ஜனாதிபதியின் புதிய ஆலோசகராக கலாநிதி மகிந்த பரக்கிரம திசாநாயக்க நியமனம்

1..8

இலங்கையின் கடல்சார் துறை, துறைமுகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தை (Supply Chain) மேம்படுத்தும் நோக்கில், கலாநிதி மகிந்த பரக்கிரம திசாநாயக்க (Dr. Mahinda Parakrama Disanayake) அவர்கள் ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 41(1) உறுப்புரைக்கு இணங்க, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடல்சார் மற்றும் துறைமுக விவகாரங்கள் மற்றும் விநியோக விவகாரங்களுக்கான (Maritime, Ports and Supply Affairs) ஜனாதிபதி ஆலோசகராக அவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.