ஆதிஸ்ரீ ஐயப்ப சேத்திரத்தில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்குமார் கௌரவிப்பு

09 2 3

கொழும்பு 13, 69A A. G ஹிணி அப்புஹாமி மாவத்தையில் அமைந்திருக்கும் ஆலயம் ஆதிஸ்ரீ ஐயப்ப சேத்திரம். இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பித்து இந்த வருடத்துடன் 50 வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இந்த பொன்விழாவையொட்டி ஆதிஸ்ரீ ஐயப்ப சேத்திரத்தில் அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கத்தினரால் விஷேட பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடந்த 27ஆம் திகதி காலை 5.00 மணி கணபதி ஓமத்துடன் மண்டல பூஜை ஆரம்பமாகியது. அன்று காலை 9.24 மணி வரை நடைபெற்ற பூஜையில், பெருந்தோட்ட உடகட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குமார் கலந்து சிறப்பித்தார். மாலை பூஜை ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய கோயில் கணகலிங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு இன்று 29ம் திகதி மஹா குரு பூஜையும் நாளை 30ம் திகதி மஞ்சமாதா பூஜையும் 31ம் திகதி விசேட பூஜையும் திருப்பதி அலங்கார பூஜையும் நடைபெறும். எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறும் கருப்பண்ண சுவாமி பூஜையுடன் இந்த பொன்விழா பூஜைகள் யாவும் நிறைவுபெறும். 08ம் திகதியும் 09ம் திகதியும் இருமுடி கட்டி இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொள்ளப்படும்

அனைவரும் இந்நிகழ்வுகளில் கலந்து ஐயனின் அருளை பெற்றிடுமாறு ஊடக செயலாளர் பொன், பத்மநாதன் தெரிவிக்கின்றார்.