– வான்பரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த 5 வருட இணக்கப்பாடு
இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 625,000 சதுர மைல் வான்பரப்பில் ஏற்படும் விபத்துக்களின் போது மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இந்தோனேசியாவுடன் இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2025 ஆம் ஆண்டு முதல் மேலும் 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் வகையில் நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


