இலங்கை அணிக்கு லசித் மாலிங்க பயிற்சி

decb31

இலங்க அணியின் வேகப்பந்து பயிற்சி ஆலோசகராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 15 தொடக்கம் ஜனவரி 25 ஆம் திகதி வரையாக குறுகிய காலத்திற்காகவே அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 டி20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை வேகப்பந்து குழாத்தை தயார்படுத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காகவே மாலிங்க அழைக்கப்பட்டுள்ளார். அவரது அனுபவம் வேகப்பந்து வீச்சுக்கும், குறிப்பாக குறுகிய ஓவர் போட்டிகளில் கடைசி ஓவர்களில் பந்து வீசுவதற்கும் பெரிதும் உதவும் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. எனினும் மாலிங்க இலங்கை அணிக்கு பயிற்சி அளிப்பது இது முதல் முறையல்ல இதற்கு முன்னரும் அவர் அவ்வப்போது இலங்கை அணிக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.

டி20 உலகக் கிண்ண போட்டி இலங்கை மற்றும் இந்தியாவில் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.