நாட்டின் கடல் வளங்களையும் கடற்றொழிலாளர்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கிரிந்த கடற்றொழிலாளர்களிடம் தெரிவித்தார்.
அமைச்சர் நேற்று (26) கிரிந்த துறைமுகத்திற்கு ஆய்வுப்பயணம் மேற்கொண்டார். இதன்போது துறைமுக அதிகாரிகள், மீனவர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
கிரிந்த துறைமுகத்தில் மணல் குவிவதால் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக மீனவர்கள் அமைச்சரிடம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கமைவாக மணலை அகற்றி துறைமுகத்தை நவீனமயமாக்க அமைச்சர் ஏற்கனவே அதிகாரிகளை பணித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் அடுத்த வாரம் தொடங்கும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். மீனவ துறைமுக மேம்பாடு மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனை உள்ளிட்ட துறையில் முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கிரிந்த கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் விளக்கினார்


