சீனாவின் முதல் இலங்கை உணவகம் பெய்ஜிங்கில் திறக்கப்படுகிறது

சீனாவின் முதல் இலங்கை உணவகமான “சினாரா”, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில், இல. 3015, 3வது மாடியில், பெய்ஜிங் சாவோய் சோஹோவில் 8 ஆம் திகதி திறக்கப்பட்டது.

இலங்கை உணவின் சுவையை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன், இலங்கையின் இளம் தொழில்முனைவோரான சிரஞ்சயா உடுமுல்லகே இந்த உணவகத்தைத் தொடங்கினார்.

இது சீனாவில் பணிபுரியும் மற்றும் படிக்கும் இலங்கையர்களுக்கு சுவையான இலங்கை உணவை அனுபவிக்கவும், சீன நாட்டினர் இலங்கை உணவு வகைகளை அனுபவிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

இலங்கையின் பல பிராண்ட் உணவகங்களுக்கு பங்களித்த சமையல்காரர் நிஷாத் சமரநாயக்க, ‘சினாரா’ உணவகத்தின் தலைமை சமையல்காரராகவும், சீனாவின் குன்மிங் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ பட்டதாரியான மனோஜ் லியனகே, உணவக முகாமையாளராகவும் உள்ளானர். மேலதிகமாக, சமையல் தகுதிகள் மற்றும் அனுபவமுள்ள இரண்டு இளம் இலங்கை சமையல்காரர்கள் கொண்ட குழு இலங்கை உணவு வகைகளின் சுவையை பரிமாறுகின்றனர்.

‘சினாரா’ உணவகம் வெறும் உணவகம் மட்டுமல்ல, அங்கு வருகை தரும் சீனர்களுக்கு இலங்கையைப் பற்றிக் கற்பிக்கவும், அதன் மூலம் நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. சினாரா உணவகச் சங்கிலி, எதிர்காலத்தில் பெய்ஜிங்கிற்கு மட்டுமல்ல, சீனாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் விரிவடையவுள்ளது, மேலும் இது சீனாவில் கல்வியை முடிக்கும் இலங்கை மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். ‘சினாரா’ உணவகத்தின் நிறுவனர் சிரஞ்சய உடுமுல்லகே, சீனாவில் உயர்கல்வி பெற்று, பின்னர் வணிக உலகில் நுழைந்து, சீனாவின் முதன்மையான வெளிநாட்டு தொழில்முனைவோர் என்ற நற்பெயரைப் பெற்றார். இலங்கை பிராண்டுகளை சீனாவிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் உடுமுல்லகேவால் நிறுவப்பட்ட “ஸ்ரீ ரோடு”, (Sri Road) கிட்டத்தட்ட 30 முன்னணி இலங்கை பிராண்டுகளை சீனாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மெலிபன், மன்ச்சி, பிரீமா, ரிட்ஸ்பரி, எலிஃபண்ட் ஹவுஸ் ஆகியவை அவற்றில் சில பிராண்டுகள்.

சிரஞ்சயாவின் வணிக வலையமைப்பில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனத்திற்கான NCE ஏற்றுமதி விருதுகளை வென்ற இலங்கை தயாரிப்பு பிராண்டான “சிலோன் டிப்ஸ்”, உள்ளூர் தொழில்முனைவோரின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்ட “சினோ எக்ஸ்பர்ட்ஸ்” மற்றும் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனமான “ட்ரஸ்ட் ஹொலிடேஸ்” ஆகியவை அடங்கும்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான இடமாக சீனா தற்போது விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது, மேலும் தலைநகரான பெய்ஜிங் உலகெங்கிலும் உள்ள உணவுப் பிரியர்களுக்கு ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது. இலங்கையின் பெயரை சர்வதேச அளவில் உயர்த்த சிரஞ்சய உடுமுல்லவின் பணி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ‘சினாரா’ உணவகம் தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயங்குகிறது. மேலும், சீனாவில் தற்போது பயிலும் 4,000க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் அனைத்து தேச மக்களையும் இலங்கையின் துடிப்பான மற்றும் உண்மையான சுவைகளை அனுபவிக்க அழைக்கிறது.