சென்யார் புயலினால் இந்தோனேசியா, தாய்லாந்தில் 563 பேர் உயிரிழப்பு

dec 1 1

சென்​யார் புயல் காரண​மாக இந்​தோ​னேசி​யா​வில் 300 பேரும், தாய்லாந்​தில் 263 பேருமாக இரு நாடு​களி​லும் இது​வரை 563 பேர் உயிரிழந்துள்​ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலாக்கா நீரிணைப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு பகுதி சென்​யார் புய​லாக வலுப்​பெற்று இந்தோ​னேசி​யா​வின் வடக்கு சுமத்ரா பகு​தி​யில் கரையைக் கடந்​தது. இதன்​ காரண​மாக அங்கு கனமழை பெய்​து, பல்​வேறு இடங்​களில் பாரிய வௌ்ளமும் மண்சரிவும் ஏற்​பட்​டது. அதன் விளைவாக வடக்கு சுமத்​ரா, மேற்கு சுமத்​ரா, அச்சே மாகாணங்களில் இது​வரை 300 பேர் உயி​ரிழந்துள்​ளனர். 620 பேர் படுகா​யம் அடைந்​துள்​ளனர். வெள்​ளம், மண்சரிவு ஏற்​பட்ட பகுதிகளில் 290 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் சுமார் 29,000 பேர் நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்டுள்​ளனர். சுமார் 3.11 பில்​லியன் டொலர் பொருட்சேதமும் ஏற்​பட்​டிருக்​கிறது. புய​லால் பாதிக்​கப்​பட்ட பகுதிகளில் இயல்பு நிலை ஏற்பட பல வாரங்​களாகுமென தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் தாய்​லாந்தின் 14 மாகாணங்​களில் பெரும் பாதிப்​பு​கள் ஏற்பட்டுள்​ளன. அந்நாட்​டில் இது​வரை 263 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். அத்தோடு மலேசி​யா​வின் 10 மாகாணங்​களிலும் இப்புய​லால் பாதிப்புகள் ஏற்​பட்டுள்​ளன. அங்கு சுமார் 21,000 பேர் பாது​காப்​பான இடங்களில் தஞ்​சமடைந்​துள்​ளனர். 2 பேர் உயி​ரிழந்துள்​ளனர்.

பி.பி.சி