ரஷ்ய, இந்திய ஒத்துழைப்பில் எந்த மூன்றாம் நாடும் இலக்கில்லை

dec 8

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு அமெரிக்கா உட்பட எந்தவொரு மூன்றாவது நாட்டையும் இலக்காகக் கொள்ளவில்லை என்று ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்,

ரஷ்ய-இந்திய இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் மற்றும் அவற்றுக்கான வொஷிங்டனின் எதிர்வினைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ரஷ்ய ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறார், அவருக்கு ஆலோசகர்கள் உள்ளனர். வர்த்தக கூட்டாளிகள் மீது கூடுதல் வரிகளை விதிப்பது உட்பட அத்தகைய வரிவிதிப்புக் கொள்கைகளை செயல்படுத்துவது இறுதியில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பும் ஆலோசகர்கள் அவருக்கு உள்ளனர். அவர் நல்லெண்ணத்துடன் செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன்.

ரஷ்யா இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. எங்கள் நிபுணர்கள் இதில் ஆபத்துகள் இருப்பதாக நம்புகிறார்கள். எந்தப் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுவது என்பதைத் தீர்மானிப்பது அந்தந்த நாடும் அதன் தலைமையும் தான். நாங்கள் இதுபோன்ற நடைமுறைகளில் ஒருபோதும் ஈடுபட்டதுமில்லை. அவ்வாறு செய்வதுமில்லை, எதிர்காலத்தில் அவ்வாறு செய்யும் எண்ணமும் கிடையாது. எங்கள் பொருளாதாரம் திறந்திருக்கிறது. எங்கள் கூட்டாண்மை எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல. எங்கள் இரு நாடுகளது நலன்கள், பரிவர்த்தனைகளில், நாங்கள் மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம், மற்ற நாடுகளின் தலைவர்கள் இதைப் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்’ என்றுள்ளார்.

ஏ.என்.ஐ