கடல்சார், வான்வெளி கண்காணிப்பு வலுப்படுத்தப்படும் – ஜப்பான் பிரதமர்

dec 11 2

கடல்சார் மற்றும் வான்வெளி கண்காணிப்பை வலுப்படுத்தவும் இராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் தனது நாடு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று ஜப்பானின் பிரதமர் சானே தகைச்சி தெரிவித்துள்ளார்.

ஒகினாவா தீவுகளுக்கு அருகில் ஜப்பானிய போர் விமானங்களுக்கு ரடார் வெளிச்சம் பாவிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சீனத் தூதுவரை அழைத்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு தமது ஆட்சேபனைகளை தெரித்த போதிலும் ஜப்பானின் குற்றச்சாட்டுக்களை சீனா முற்றிலும் நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், ஒகினோவா தீவுகளின் தென்கிழக்கு பகுதியில் தொலைதூர கடற்பயிற்சியை சீன இராணுவம் மேற்கொண்டுள்ளது. இதன் நிமித்தம் பயன்படுத்தப்பட்டுள்ள லியோனிங் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து சுமார் 100 யுத்த விமானங்கள் புறப்பட்டது. அக்கப்பலில் இருந்து ஜே-15 போர் விமானங்கள் தங்கள் தீயணைப்பு ரடாரை ஜப்பானிய எப்-15 விமானங்களுக்கு இரண்டு முறை செலுத்தின. இது ஒரு சாத்தியமான தாக்குதலுக்கான சமிக்ஞையாகும். அதனால் இலக்கு வைக்கப்பட்ட விமானம் தப்பிக்கும் நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்துகிறது என்றுள்ளது.

இந்த சம்பவம் ஆபத்தானதும் மிகவும் வருந்தத்தக்கதுமாகும் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி கூறியுள்ளார்.

ஜப்பானின் கூற்றுக்களை மறுத்துள்ள சீனா, ஜப்பானின் தற்காப்புப் படைகள் தங்களது லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் குழு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தீங்கிழைக்கும் வகையில் பின்தொடர்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

த கார்டியன்