தாய்லாந்து – கம்போடியா இடையில் நேற்று முதல் மீண்டும் மோதல்

dec 15 2

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்த முயற்சிகளை நிராகரித்து, தாய்லாந்து இராணுவம் கம்போடியாவிற்கு எதிராக இறையாண்மை பிரதேசத்தை மீட்டெடுப்பதற்கான புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

கம்போடியா அதன் அனைத்து எல்லைக் கடவைகளையும் மூடியதைத் தொடர்ந்து டிராட் மாகாணத்தின் எல்லை பிரதேசங்களை மீட்டெடுக்க இந்த இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததாக ரோயல் தாய் கடற்படை பேச்சாளர் ரியர் அட்மிரல் பராச் ரத்தனசய்யப்பன் கூறியுள்ளார்.

800 கிலோ மீற்றர் எல்லையை நிர்ணயிப்பது தொடர்பான நீண்டகால சர்ச்சையில் இருந்து இம்மோதல் நிலை ஆரம்பமாகியுள்ளது. இரு தரப்பு மோதல்களில் சுமார் 25 வீரர்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர், அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

சர்வதேச சட்டத்தின்படி, தற்காப்பு மற்றும் தேசிய இறையாண்மையைப் பாதுகாத்தல் என்ற கொள்கைகளின் கீழ் இந்த இராணுவ நடவடிக்கை நேற்று அதிகாலையில் தொடங்கப்பட்டது. எதிரி படைகளை வெளியேற்றி, குறித்த பகுதியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி எமது படையினர் மீட்டெடுத்துள்ளனர். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இணைந்து இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதாகவும் டிராட் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.

அல் ஜசீரா