பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று 15 ஆம் திகதி முதல் 21 திகதி வரையான ஒரு வாரம் தேசிய போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஐந்து வயதுக்கு உட்பட்ட 10.6 மில்லியன் குழந்தைகளுக்கு 30 மாவட்டங்களில் 1345 நிலையங்கள் ஊடாக போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படவிருக்கிறது. போலியோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் இவ்வாண்டு மாத்திரம் ஒன்பது பேர் போலியோ வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


