இஸ்ரேலில் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம்!.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காஸா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த 6 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிய வீரர்கள் கண்டெடுத்ததை அடுத்து மக்கள் வீதிகளில் இறங்கினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் – பலர் இஸ்ரேலிய கொடிகளை ஏந்தியிருந்தனர் – டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பிற நகரங்களில் கூடி, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேலிய அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர்.