கத்தாரில் 17 வயதுக்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் நேற்று(03) Aspire Zone விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் 8 ஆட்டங்கள் நடைபெறும் வகையில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறவுள்ளன.
நேற்று நடைபெற்ற 8 போட்டிகளில், கத்தார் – இத்தாலி, தென் ஆப்பிரிக்கா – போலிவியா, ஜப்பான் – மொராக்கோ, அர்ஜென்டினா – பெல்ஜியம், துனீசியா – ஃபிஜி அணிகள் போட்டியிட்டன.
மேலும், துவக்கப் போட்டியில் இத்தாலியாவிடம் 1-0 என்ற கணக்கில் கத்தார் அணி தோல்வி அடைந்தது.
அனைத்து போட்டிகளும் Aspire Zone பகுதியில் அமைந்துள்ள நவீன விளையாட்டு மைதானங்களில் நடைபெறும். இறுதிப் போட்டி மட்டும் Khalifa International Stadium-இல் நடைபெறும்.


