நாட்டின் மின்தேவையின் 12 வீதத்தை பூர்த்தி செய்யும் சொபாதனவி திட்டம்

sep19

இரண்டாம் கட்டம் பிரதமரால் ஆரம்பம்

எமது நாட்டின் தொழில்முறை நிபுணர்கள் நிலைநாட்டியுள்ள சாதனை

நாட்டின் ஆற்றல்துறையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான நோக்கில் கட்டியெழுப்பப்பட்ட 350 மெகாவாட் திறன் கொண்ட கெரவலப்பிட்டிய Sobadanavi திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மின்நிலையத்தின் இரண்டாம் கட்டம் நேற்றுமுன்தினம் (17) திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்புவிழா பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய, மின்சார மற்றும் வலுசக்தி அமைச்சர் பொறியாளர் குமார் ஜெயக்கொடி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டமானது நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றும் முக்கிய அடித்தளமான திட்டமொன்றின் நிறைவைக் குறிக்கும் விதமாகவும், தேசிய மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும் அமைந்தது.

இலங்கை மின்சாரசபையின் நீண்டகால மின் உற்பத்தி திட்டத்தில் பிரதானமாக விளங்கும் சோபாதனவி மின்நிலையம், தற்போதைய மின்சாரத் தேவையின் 12% பங்கை பூர்த்தி செய்யக் கூடியதாகும்.

இதேபோன்று, இது இலங்கையின் மிகப்பெரியதும் மிகச் செயல்திறனும் கொண்ட கூட்டு சுழற்சி மின்நிலையமாகும். இந்த மின்நிலையம் அடுத்த 20 ஆண்டுகளுக்கான நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாகும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது.

முதல் கட்டம்: 220 மெகாவாட் திறன் கொண்ட திறந்த சுழற்சி செயல்பாடு.

இரண்டாம் கட்டம்: நீராவி டர்பைன் ஒன்றை நிறுவுவதன் மூலம் மேலும் 130 மெகாவாட் திறனைச் சேர்த்து, மொத்த திறன் 350 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது. இந்த கூட்டு சுழற்சி கட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2025 ஜூன் 23 அன்று நிறைவுசெய்யப்பட்டன.

இந்த மின் நிலையம் LNG-ஐ முதன்மை எரிபொருளாகவும், டீசலை இரண்டாம் நிலை எரிபொருளாகவும் பயன்படுத்தி இயங்குகிறது. LNG பயன்பாட்டின் அதிகபட்ச திறனைப் பெறுவதற்காக, முழுமையான வணிகச் செயல்பாடுகள் ஆரம்பமான மூன்று ஆண்டுகளுக்குள் LNG வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் நீண்டகால உற்பத்தித் திட்டத்திற்கு (2023-2042) ஏற்ப, இந்தத் திட்டம் 2030 ஆம் ஆண்டிற்குள் தேசிய தேவையின் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலம் பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதில் நேரடியாக பங்களிக்கிறது.

மேலும், இந்த மின் நிலையத்தின் F வகை எரிவாயு டர்பைனில் 30% ஹைட்ரஜன் கலந்து இயக்கும் திறன் இருப்பதால், 2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வௌியேற்றத்தைத் தடுக்கும் இலக்கை அடைவதில் இது பெரிய உதவியாக இருக்கும்.

இந்தத் திட்டம், இலங்கை மின்சார சபைக்கு உட்பட்ட LTL Holdings நிறுவனத்தின் துணை நிறுவனமான Lakadnavi நிறுவனத்தின் துணை நிறுவனமான Sobadanavi நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. உள்நாட்டு வங்கிக் குழுவின் மூலம் பெறப்பட்ட கடன் நிதியால் திட்டத்திற்குத் தேவையான மூலதனம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2025 ஏப்ரல் மாதத்தில் கடன் வழங்குநர்களும் அரசும் இடையே நேரடி ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், பொறியியல், நிதியுதவி, கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகிய துறைகளில் இலங்கையின் திறன்களை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.

சோபாதனவி மின்நிலையம் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்க உறுதிபூண்டுள்ளது. நிலையான மற்றும் சுமத்தக்கூடிய விலையில் ஆற்றல் வழங்குவதன் மூலம், நாட்டில் தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், மொத்த பொருளாதார நிலைத்தன்மைக்கும் இது பங்களிக்கக் கூடிய திறன் பெற்றுள்ளது.

அதேபோல், ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு நேரடியாகவே வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, நாட்டின் முழுவதும் கோடிக்கணக்கான குடிமக்களுக்கு மறைமுகமாக சேவையையும் வழங்குகிறது.

மேலும், சோபாதனவி மின்நிலையம் கட்டுமானத் திட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில், பொறியாளர்கள், பெண்கள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் துணை பணியாளர்கள் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் பெண்கள் பணியாற்றினர். இதன் மூலம், பெண்களை சக்திவாய்ந்தவர்களாக்கும் நோக்கில் Lakadnavi நிறுவனம் கொண்டுள்ள வலுவான அர்ப்பணிப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.

சோபாதனவி மின் நிலையம் இலங்கையின் மின்வலுச் செயன்முறையின் எதிர்காலத்தில் ஒரு முக்கிய இணைப்புப்பாலமாக திகழ்கிறது.

இங்கு உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டதாவது:

“சோபாதனவி மின்நிலையம் மூலம் தேசிய மின் அமைப்பிற்கு மேலும் 350 மெகாவாட் இணைக்கப்படுகிறது. மின்சக்தித் துறையில் இடையறாத முறையில் மாறிக்கொண்டிருக்கும் நுகர்வோர் தேவைகள் மற்றும் கட்டுப்பாட்டு வடிவமைப்புகளுடன் ஒத்திசைவாக, நிலைத்தன்மை மற்றும் புதுமையை முன்னிறுத்திய மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை உலகம் தற்போது கடந்து வருகிறது.

அதன்படி, உலகளாவிய போக்குகள் இவ்வாறு அமையும்போது, எங்கள் பிராந்தியத்தின் மின்கட்டணம் அதிகரித்த நாடுகளுக்குள் இலங்கை உயர் இடத்தில் இருக்கின்றது. பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக, பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்ற எமது நாடு மீண்டெழுவதற்கான முக்கிய தடையாக மின்சாரச் செலவினை குறிப்பிடலாம்.

se19
s19