கொழும்பில் திட்டமிடப்பட்டிருந்த நீர் வெட்டு இடைநிறுத்தம்

sept18

– தேசிய நீர் வழங்கல் அதிகார சபை அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (18) 9 மணி நேரம் திட்டமிடப்பட்டிருந்த  நீர் விநியோகத் தடை  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரைப் பெறும் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் தடைப்பட்டது.

அதற்கமைய  இன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல்  7.30 மணி வரை நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) முன்னர்  அறிவித்தது.

இருப்பினும், பின்வரும் பகுதிகளில் செயல்படுத்தப்படவிருந்த நீர் வெட்டு நடைபெறாது என்று பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை, மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட மாட்டாது.