பேஸ்புக் மூலம் ஒன்றுகூடல்; 26 பேர் போதைப்பொருளுடன் கைது

facebook party 26 arrested with drug teldeniya victoria

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பேஸ்புக் மூலமான ஒன்றுகூடலில் 4 யுவதிகள் உள்ளிட்ட 22 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 முதல் 31 வயதுக்குட்பட்ட, கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை, ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட யுவதிகள் 21 முதல் 26 வயதுக்குட்பட்ட, கண்டி, நீர்கொழும்பு, பூண்டுலோயா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இவர்களிடமிருந்து, 4134 மி.கி. ஐஸ், 1,875 மி.கி. ஹேஸ், 2769 மி.கி. குஷ், 390 மி.கி. கொக்கைன், 804 மி.கி. மஷ்ரூம், 13 போதை மாத்திரைகள், 12 சட்டவிரோத சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் இன்றையதினம் (13) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.