மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்

48

ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பாக கரைக்குத் திரும்புமாறு அறிவிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக மீனவர்களுக்கான விசேட அறிவிப்பை கடற்றொழில் திணைக்களம் விடுத்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் கடற்றொழிலுக்காக அனைத்து வித மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளது.

அத்துடன், ஏற்கனவே தொழிலுக்கு சென்று ஆபத்தான கடல் பிராந்தியங்களில் தற்போது தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் உடனடியாக கரைக்குத் திரும்பவும் அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அத்துடன் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் என முக்கிய அறிவிப்புகள் மற்றும் வானொலிச் செய்திகள் தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்தி அதற்கு இணங்க செயற்படுவது அவசியம் என்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.