நைஜீரியாவில் 300 மாணவர்கள் ஆயுததாரிகளால் கடத்தல்

nov 24

நைஜீரியாவில் 303 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்​தில் உள்ள புனித மேரி மேல்​நிலை கல்லூரியில் இருந்து 303 மாணவர்​களும் 12 ஆசிரியர்​களும் வனப் பகு​திக்​குள் கடத்தி செல்​லப்பட்​டுள்​ளனர் என்று கல்லூரியின் நிர்​வாக தலை​வர் புலுஸ் தாவா யோகனா தெரி​வித்​துள்​ளார்.

கல்லூரியின் பாதுகாவலர் மீது துப்​பாக்​கி பிரயோகம் செய்துவிட்டு மாணவர்​கள் கடத்​திச் செல்​லப்​பட்​டுள்​ளனர் என்று நைஜீரிய கத்தோலிக்க சங்கம் தெரிவித்துள்ளது.

நைஜீரி​யா​வின் கெப்பி மாநிலத்​தின் மகாநகரில் கடந்த திங்களன்று 25 பாடசாலைப் பிள்ளைகள் கடத்​தி செல்லப்பட்ட பின்னர் இக்கடத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய கடத்​தலுக்கு உடனடியாக எந்த குழு​வும் பொறுப்​பேற்​க​வில்​லை. கடத்​தப்​பட்ட பாடசாலைப் பிள்ளைகளை மீட்க நைஜீரிய அரசு சிறப்பு படைகளை ஈடுபடுத்தியுள்ளது. இதில் உள்​ளூர் பிரதிநிதிகளும் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். பிள்ளைகளைப் பாதுகாப்பாக மீட்​பதில் பாடசாலை நிர்​வாக​மும் இணைந்து செயற்பட்டு வரு​கிறது என நைஜர் மாநில பொலிஸார் தெரி​வித்​துள்​ளனர்.

பிணைத் தொகைக்​காக பாடசாலை மாணவர்​கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.