ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அனுமதி பெறுவது இனி கட்டாயம் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பாதையில், அமெரிக்கக் கொடி ஏந்திய கப்பல்கள் உட்பட அனைத்து வணிகக் கப்பல்களும் தொடர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் இப்பகுதியைக் கடக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு கூறுகிறது.


