ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக நேற்று நடந்த டி20 உலகக் கிண்ண போட்டியில் மொஹமட் அர்பானின் விக்கெட்டை வீழ்த்திய ஆப்கான் அணித் தலைவர் ரஷீத் கான் டி20 கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக சாதனை படைத்தார்.
699 விக்கெட்டுகளுடன் டெல்லியில் நடந்த போட்டியில் களமிறங்கிய அவர் 16 ஆவது ஓவரில் வைத்து இந்த மைல்கல்லை தொட்டார். டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக ரஷீத் கான் இருக்கும் அதேநேரம் இந்த வரிசையில் மேற்கிந்திய தீவுகளின் ஓய்வு பெற்ற ட்வாயன் பிராவோ 631 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தற்போது ஆடிவரும் வீரர்களில் சுனில் நரைன் 613 விக்கெட்டுகளுடன் பிராவோவுக்கு பின்னால் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் 191 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் ரஷீத் கான் முதல் இட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


