‘டித்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் கடும் வெள்ளம் காரணமாக நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த புத்தளம் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து, நாளை (பெப்ரவரி 16) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, பத்துளுஓயா பாலத்திற்கு அருகில் சேதமடைந்திருந்த தண்டவாளங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் மற்றும் பலாவி வரையான அலுவலக ரயில்கள் மற்றும் சாதாரண ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறவுள்ளன. இந்தத் தீர்மானம் அப்பகுதி அலுவலக ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.


