இலங்கை நாட்டை கட்டியெழுப்ப இந்த சுதந்திர தின நாளில் உறுதி பூண்டு சகல விதத்திலும் ஜனாதிபதிக்கும் அரசங்கத்திற்கும் ஆதரவை வழங்கி அனைவரும் கை கோர்ப்போமாக என கலஹம தம்மரன்சி தேரர், கலாநிதி இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அஸ்ஸெய்யித் ஹசன் மௌலானா, வண. அருட் தந்தை நிசான் சம்பத் குரே ஆகியோர் சுதந்திர தின நல்லாசி செய்தியில் தெரிவித்துள்ளனர்.
நாட்டு மக்கள் இன்று 78வது சுதந்திர தின விழாவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் கொண்டாடி மகிழ்கின்றனர். அனைத்து இன மக்களும் இன, மத,மொழி வேறுபாடின்றி சமத்துவமாக மதிக்கப்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எடுத்துவரும் நடவடிக்கைகள் இந்த சுதந்திர தின நாளில் அத்திவார நாளாக அமைய வேண்டும். அதேவேளை இலங்கை நாட்டை கட்டி எழுப்பவும் மக்களுக்கு சுபீட்சமான வாழ்கை மேலோங்கவும் இடர்பாடுகள் அற்ற நாடாக அமைவதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் நல்வழி காட்டும் என்பதில் ஐயம் இல்லை என மதத்தலைவர்கள் விடுத்துள்ள நல்லாசி செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

