சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான அட்டைகள் பற்றாக்குறையாக இருந்ததால் முன்னர் வழங்க முடியாத சுமார் 500,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சாரதி அனுமதிப் பத்திரங்கள் தபால் திணைக்களம் வழியாக விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாததால் நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் இடைக்காலத்தில் வழங்கப்பட்டன.
தேவையான அட்டைகள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், தற்போது மூன்று இடங்களில் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.வேரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள பிரதான அலுவலகத்திலும், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரத்தில் உள்ள பிராந்திய மத்திய நிலையங்களிலும் அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


