எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்வதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்கள்

01 12 2

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் பல விதிகள், அரசியலமைப்பிற்கு முரணானவை என்பதைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எம். பிரேமசிறி, நவரட்ண பண்டா, பி.எம். தீபால் குணசேகர மற்றும் சமன்சிறி ஹேரத் ஆகியோர் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்துள்ளனர். இரண்டாவது மனுவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பியசோம உபாலி மற்றும் உபாலி அமரசிறி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.ஓய்வூதியத்தை ரத்துச் செய்வதற்காக சட்டத்தரணி சனத் விஜேவர்தன மூலம் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் முன்மொழியப்பட்ட பிரேரணையில்,சில பிரிவுகள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை இரத்துச் செய்வதற்கான பிரேரணை இயற்றப்பட வேண்டுமானால், அது பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டுமென தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.