2026 ஆம் ஆண்டும் மாணவர்களுக்கு ரூ. 6,000 கற்றல் உபகரண கொடுப்பனவு

1.13

– அஸ்வெசும குடும்பங்கள், தேவையுடைய மாணவர்களுக்குப் பெரும் உதவி

பாதுகாப்பான மற்றும் தரமான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்ய தலா ரூ. 6,000 கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அஸ்வெசும குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், 300 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலுள்ள மாணவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படும்.