அமெரிக்காவை அடிக்கடி தாக்கிவரும் பனிப்புயல் காரணமாக 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வடமேற்கில் மோண்டானா முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை 2,500 கிலோ மீற்றர் நீளத்துக்கு உட்பட்ட 27 மாகாணங்களுக்கு அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை வானிலை மத்திய நிலையம் விடுத்துள்ளது.
கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்துள்ளது. கன்சாஸ் சிட்டியில் 10 சென்றி மீற்றர் அளவும், செயின்ட் லுாயிசில் 7 சென்றி மீற்றர் அளவும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதேவேளை லூயிஸ்வில்லில் சுமார் 3 அங்குல படியும் மிசௌரி மற்றும் இண்டியானாபோலிஸிலும் சுமார் 2 முதல் 4 பனிப்பொழிவு தொடங்கியதிலிருந்து 150க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் குளிர்காலம் நிலவும். அக்காலப்பகுதியில் கடும் பனிப்புயல்கள் தாக்குவது வழமையே
ஏ.பி.சி நியூஸ்
அமெரிக்காவில் பனிப்புயல் 5.5 கோடி பேர் பாதிப்பு


