நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்புடின் கவலை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைத் தொடர்பு கொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடின், இலங்கையின் நிலைமைகளுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் மீண்டெழுவதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். இலங்கையின் இந்த கடினமான காலகட்டத்தில் ரஷ்யா இலங்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு அனுதாபம் தெரிவித்த அவர்,அவதிக்குள்ளாகியுள்ளோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.


