இந்தக் கடினமான காலத்தில் ரஷ்யா இலங்கையுடன் இணைந்திருக்கிறது- ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல்

dec 2

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மனித உயிரிழப்புகள் மற்றும் பரவலான அழிவுகள் குறித்து ஆழ்ந்த துயரத்தைத் தெரிவிப்பதாகவும், இந்த கடினமான காலத்தில் ரஷ்யா, இலங்கையுடன் இணைந்திருக்கிறது எனவும் புடின் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் தனது அனுதாபங்களையும் ஆதரவையும் பகிருமாறு அவர் இலங்கை ஜனாதிபியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.