கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் டி20 தொடரில் நேற்று முன்தினம் (17) நடந்த ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய நிலையில் ஏ குழுவில் அரையிறுதிக்கு முன்னேறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஆப்கான் ஏ அணி 78 ஓட்டங்களுக்கே சுருண்ட நிலையில் பங்களாதேஷ் அணி அந்த இலக்கை 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.
இதன்படி ஏ குழுவில் பங்களாதேஷ் ஏ அணி 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் இலங்கை மற்றும் ஆப்கான் ஏ அணிகள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. இன்று (19) கடைசி குழுநிலை போட்டிகளாக துனித் வெள்ளாலகே தலைமையிலான இலங்கை ஏ அணி பங்களாதேஷ் ஏ அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு ஆப்கான் ஏ அணி ஹொங்கொங்கை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் அரையிறுதிக்கு முன்னேற இலங்கை ஏ அணி இன்றைய தினம் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்பதோடு முதல் இரு இடங்களை தக்கவைப்பதற்கு ரன் ரேட்டையை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.


