உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் உரிமையாளர் சங்கமும் இணைந்து நேற்று (27) கடற்கரையை சிரமதானம் மூலம் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டது.
இதன் போது, பாசிக்குடா மற்றும் அதனை அண்டிக்காணப்படும் யானைக்கல் மலை, கடற்படை முகாம் என சுமார் 5 கிலோ மீற்றர் சுற்றுவட்டாரத்தில் குறித்த சிரனதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் உரிமையாளர் சங்கத்தலைவர் திரு. ரணிக்க தலைமையில் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியின் போது, நட்சத்திர விடுதி முகாமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த பணியின் போது சுமார் 500 கிலோ கிராம் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
குறித்த பணியில் ஈடுபட்ட மற்றும் ஒத்துழைப்பு வழங்கி அனைவருக்கும் கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் உரிமையாளர் சங்கத்தினர் நன்றி தெரிவிக்கின்றனர்.


