அவ்வப்போது மழை பெய்யலாம்

adobestock 119570393 scaled 1 800x445

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என திணைக்களம் கூறியுள்ளது. 

ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்ளிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள், திருகோணமலை, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான பலத்த காற்றும் வீசக்கூடும். என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.