நீதிமன்ற வளாகத்தில் மகளை சுட்டுக்கொன்ற தந்தை

Share on facebook
Share on twitter
Share on whatsapp

பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

அந்த இளம்பெண் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வைத்தியரை சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதனால் அப்பெண் மீது தந்தை கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

இளம்பெண் தனது கணவருடன் கராச்சியின் பிரபாத் பகுதியில் வசித்தார். இந்த நிலையில் காதல் திருமணம் செய்த அப்பெண் கராச்சி நகர நீதிமன்றத்தில் தான் சுதந்திரமாக திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்துவதற்காக வாக்குமூலம் அளிக்க வந்தார். அங்கு அவரது தந்தையும் வந்திருந்தார்.

அப்போது நீதிமன்ற அறையில் இளம்பெண் மீது தந்தை துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒரு பொலிஸ் அதிகாரி காயம் அடைந்தார்.

துப்பாக்கியால் சுட்ட தந்தையை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி கூறுகையில், கௌரவ கொலையின் பின்னணியில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தந்தை, கணவர், சகோதரர் அல்லது வேறு ஆண் உறவினர் உள்ளனர் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives