பூமியில் இருந்து கிட்டத்தட்ட 3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், அண்டத்தின் மற்றொரு விண்மீன் மண்டலத்திலிருந்து (Galaxy) வரும் விசித்திரமான ரேடியோ சிக்னல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வேறொரு விண்மீன் மண்டலத்திலிருந்து இவ்வாறான ரேடியோ சிக்னல் பூமிக்கு வருவது இது இரண்டாவது முறை என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ரேடியோ சிக்னலை FRB 20190520B என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
2019-ஆம் ஆண்டு மே மாதம், சீனாவில் உள்ள குய்சோவில், அபெர்ச்சர் ஸ்பெரிகல் ரேடியோ டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் இந்த சிக்னலை பின்தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2020 மற்றும் செப்டம்பர் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த சிக்னலிலிருந்து கிட்டத்தட்ட 75 வெடிப்புகள் வந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
மத்திய நியூ மெக்ஸிகோவில் அமைந்துள்ள Very Large Array (VLA)-ஐ பயன்படுத்தி வெடிப்புகளுக்கு இடையில் தொடர்ந்து பலவீனமான ரேடியோ சிக்னல் வெளியவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர்.
மேலும், FRB 20190520B ரேடியோ சிக்னல் கடந்த 2016-இல் கிடைத்த FRB 12110-லிருந்து வந்த ரேடியோ சிக்னலோடு ஒத்துப்போவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ரேடியோ சிக்னல்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் விளக்கவில்லை. எனினும், இவை நியூட்ரான் நட்சத்திரத்திற்குப் பின்னால் விட்டுச் சென்ற சூப்பர்நோவா வெடிப்பால் வெளியேற்றப்பட்ட அடர்த்தியான பொருட்களிலிருந்து இம்மாதிரியான சிக்னல்கள் வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
FRB சிக்னல் குறித்து இன்னும் கூடுதல் ஆராய்ச்சியில் மேற்கு வெர்ஜினியா பல்கலைகழக பேராசியர்களும் ஈடுபட்டுள்ளனர். FRB சிக்னல் குறித்து இன்னும் பல கேள்விகள் எழுந்துள்ளதாகவும், அதற்கான விடைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் விஞ்ஞானிகள் இறங்கி இருப்பதாகவும் பிரபல அறிவியல் இதழான நேச்சர் (Nature) கூறுகிறது.
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More