இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை உபயோகப்படுத்துகிறோம்.
ஸ்மார்ட்போனுக்கு அத்தியாவசியம் என்றால், அது ‘சார்ஜ்’ தான்.
சார்ஜை நீண்ட நேரம் நீட்டிக்க நாம் கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன டிப்ஸ்.
பேட்டரியின் அளவு
பேட்டரி சார்ஜை முழுவதும் ட்ரை ஆகி செல்போன் ஆஃப் ஆகும் நிலைக்கு அடிக்கடி செல்லக் கூடாது. பேட்டரிக்கும் ஓர் அளவு உண்டு. 100% வரை செல்போனை சார்ஜ் போடவும் கூடாது. அதேபோல் செல்போன் ஆஃப் ஆகும் அளவுக்கும் சென்றுவிட கூடாது. 30% – 85% என்ற அளவை வைத்துக்கொள்ளலாம். 85% பேட்டரி சார்ஜ் ஆனாலே போதுமானது. பேட்டரி லைஃப்க்கும் அது நல்லது.
சரியான சார்ஜர்
ஒவ்வொரு செல்போனுடம் வரும் சார்ஜரே அதற்கு ஏற்ற சார்ஜர். சார்ஜரை மாற்றி மாற்றி பயன்படுத்துவதும் பேட்டரி ஆயுள்காலத்தை குறைத்துவிடும். அதேபோல் சார்ஜ் நீடிக்கும் நேரத்தையும் குறைக்கும். யூஎஸ்பி கேபிள் மூலம் கம்யூட்டர், லேப்டாப்பில் சார்ஜ் போடுவது, பைக், காரில் நேரடியாக சார்ஜ் போடுவது என்பதெல்லாம் அவசரத்துக்கு மட்டுமே. அதனை வாடிக்கையாக வைத்துக்கொள்ளக் கூடாது.
ஏரோபிளேன் மோடு
ஏரோபிளேன் மோடு என்பது கிட்டத்தட்ட செல்போனை அனைத்து வைக்கும் முறைதான். இன்டர்நெட், ரேடியோ சிக்னல்கள் எதுமின்றி செல்போன் இருப்பதே இந்த முறை. அதனால் வேறு வழியே இல்லை, சார்ஜ் சேமிக்கவேண்டிய கட்டாயம் என்ற நிலையில் ஏரோபிளேன் மோடு பயன்படுத்தலாம். உங்களுக்கு தேவையான நேரத்தில் ஏரோபிளேன் மோடை ஆஃப் செய்து பயன்படுத்தலாம்.
செயலிகளின் அப்டேட்
உங்கள் செல்போனில் உள்ள தேவையற்ற செயலிகளை டெலிட் செய்துகொள்ளுங்கள். சில செயலிகள் நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், இன்டர்நெட் மூலம் இயங்கிக்கொண்டே இருக்கும். அதனால் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துபோகவும் வாய்ப்புள்ளது. அதனால் தேவையான பயன்படுத்தக்கூடிய செயலிகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
வைப்ரேட்
செல்போனில் ஒவ்வொரு எழுத்து டைப் செய்யும்போதும் வைப்ரேட் ஆகும் அம்சங்கள் உண்டு. முடிந்தவரை வைப்ரேட் ஆப்ஷன்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்கலாம்.
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More