புதிய தொலைபேசிகளை வாங்குவோருக்கு அரசாங்கம் வெளியிட்ட புதிய தகவல்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

புதிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது, குறித்த தொலைபேசி இலங்கையில் பதிவு செய்துக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கான முறைமையொன்றை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

குறுந்தகவலொன்றின் ஊடாக குறித்த தொலைபேசி தொடர்பில் அறிந்துக்கொள்ள முடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகளை கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தொலைபேசி வலையமைப்புக்களுடன் இணைக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, கையடக்கத் தொலைபேசியிலுள்ள இமி இலக்கத்தை 1909 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் ஊடாக, அந்த தொலைபேசியின் பதிவு தொடர்பான தகவல்களை பயன்பாட்டாளருக்கு அறிந்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல் அனுப்பும் விதம் :- IMEI<SPACE><15DIGIT IMEI>SEND SMS TO 1909

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives