சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் காணி அளிப்பு மற்றும் அனுமதிப் பத்திரம் வழங்குதல்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் காணி அளிப்பு மற்றும் அனுமதிப் பத்திரம் வழங்குதல்!

சம்மாந்துறை பிரதேச செயலாளர் அவர்களின் அர்ப்பணிப்பும் அயராத முயற்சியின் காரணமாக காணிகளை அடையாளம் காண்பது தொடக்கம் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் வரைக்கும் உறுதுனையாக செயற்படும் கிராம சேவக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு காரணமாகவும், காணிப் பிரிவின் காணி உத்தியோகத்தர்,தலைமை முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள், அர்ப்பணிப்பான செயற்பாடுகள் காரணமாகவும் 232 க்கும் மேற்பட்ட காணி அளிப்பு மற்றும் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் .SLM.ஹனிபா அவர்கள் தலைமையில் இன்று(07) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது .

 

உதவி பிரதேச செயலாளர் UM. அஸ்லம் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளர் AHM. அன்சார் அவர்கள் கலந்து கொண்டு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார்கள். மேலும்

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண காணி ஆணையாளர் DMRC தசநாயக்க , கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் G. ரவிராஜன் ,அம்பாரை மாவட்ட மாகாணங்களுக்கிடைப்பட்ட காணி ஆணையாளர் Mrs.இஸ்திகார்

பானு, ஆகியோர்களும் அதிதிகளாக மேலதிக மாவட்ட பதிவாளர் .AK. ரினோஷா ,சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் U.L.M. சலீம், கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் ML.தாசிம் , சம்மாந்துறை பிரதேச செயலக தலைமை காணி உத்தியோகத்தர் TKM. ஜவாஹிர் மற்றும் காணி உத்தியோகத்தர் MW. ஹமீஸ் ஏனைய காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(கி.ஷனுஸ்காந்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives